சொத்து குவிப்பு வழக்கில் டிடிவி தினகரனின் சகோதரி, அவரது கணவர் சிறையில் அடைப்பு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த டிடிவி.தினகரனின் சகோதரி சீதளாதேவி மற்றும் அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோர் சிபிஐ நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலாவின் அக்கா மகளும், டி.டி.வி.தினகரனின் தங்கையுமான சீதளாதேவிக்கும், பாஸ்கரன் என்பவருக்கும் கடந்த 1990ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாஸ்கரன், ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர் பணிகாலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக சிபிஐக்கு தகவல் வந்தது.

அதன்படி சிபிஐ அதிகாரிகள் கடந்த 1998ம் ஆண்டு மார்ச் 18 மற்றும் 30ம் தேதிகளில் இவர்களது வீடு,  அலுவலகம், வங்கி லாக்கர் உள்பட பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை  நடத்தினர். அப்போது தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் சாந்தோம் கிளையில் இவர்களது லாக்கரை சோதனை செய்தபோது. பல கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப்பட்டது. அதில், 87 லட்சத்து 96 ஆயிரத்து 823 ரூபாய்  மதிப்புள்ள அசையா சொத்துகளும், 2 கோடியே 28 லட்சத்து 91 ஆயிரத்து 994  ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், சீதளாதேவி பெயரில் 1 கோடியே 68  லட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும். பாஸ்கரன்  வேலையில் சேரும்போது ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்து 816 மதிப்புள்ள சொத்துகள்  இருந்ததாக கணக்கு காட்டி உள்ளார்.

எனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர் என்பது உறுதியாக தெரியவந்துள்ளது என குற்றப்பத்திரிகையில்  கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம், பாஸ்கரனுக்கு 5 ஆண்டு சிறைதண்டனை, 20  லட்சம் ரூபாய் அபராதமும், சீதளாதேவிக்கு 3 ஆண்டு சிறைதண்டனை, ரூ.10  லட்சம் அபராதமும் விதித்து கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்டு 26ம் தேதி உத்தரவிட்டது. 

தண்டனையை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சென்னை உயர் நீதிமன்றம், சி.பி.ஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து இருவரும் தண்டணையை நிறுத்தி வைக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இருவரையும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அதன்படி இருவரும் சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி திருநீலபிரசாத் முன்னிலையில் நேற்று 2 மணியளவில் சரணடைந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அப்போது பாஸ்கரன் மற்றும் சீதளாதேவி தரப்பில் ஆஜராகியிருந்த வக்கீல் கே.எம்.சுப்பிரமணியன் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும், மேலும் இருவரும் வருமான வரி செலுத்தி வருவதால் ஏ-கிளாஸ் சிறை அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.  மனுவை விசாரித்த நீதிபதி சிபிஐ தரப்பை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார். இதனையடுத்து இருவரையும் சிபிஐ அதிகாரிகள் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

சிறையில் சொகுசு வசதிக்கு ஏற்பாடு: இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகு, வழக்கை விசாரித்த நீதிபதி உடனே சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து சீதளாதேவி மற்றும் பாஸ்கரன் ஆகியோருடன் நீதிமன்றத்துக்கு வந்திருந்த உறவினர்கள் தங்களுக்கு தெரிந்த சிறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு போன் செய்து, சிறையில் சிறப்பு ஏற்பாடு செய்ய தொடங்கிவிட்டனர். மேலும் உள்ளே எந்த குறையும் இருக்காது எல்லாம் நம்ப ஆளுங்க தான் பார்த்துப்பங்க என்றும் பேசிக்கொண்டனர். இருவரும் சொகுசு காரில் தான் சிறைக்கு சென்றனர்.


Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018