காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மாநில முதல்வர்கள் சந்தித்து பேசினால் தீர்வு ஏற்படும்: புதுவை முதல்வர் நாராயணசாமி பேச்சு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாநில முதல்வர்கள் சந்தித்து பேசினால் தான் தீர்வு ஏற்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசினார். நேற்று இரவு எழும்பூரில்  திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் டவுட்டனில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி எஸ். ராஜா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின் போது பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்குவந்தார். 4 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

 ஏழை எளிய மக்களின் பணம் சுரண்டப்பட்டு வங்கி மூலம் விஜயமல்லையா, நீரவ்மோடி போன்ற தொழில் அதிபர்களுக்கு கடனாக கொடுத்து அவர்களை வெளிநாட்டுக்கு தப்பி செல்ல மத்திய அரசு துணைபோகிறது. பாஜ ஆட்சி மீண்டும் வராமல் தடுக்க மதசார்பற்ற சக்திகள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம்  6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை மத்திய அரசு அதை அமைக்க முயற்சி எடுக்கவில்லை. தமிழக மக்கள் குரல் கொடுத்ததால் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்காரி  மாநில தலைமை செயலாளர்கள் சந்தித்து பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். 

தலைமை செயலாளர்கள் சந்தித்து பேசுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. மாநில முதல்வர்கள் சந்தித்து பேசினால் தான் தீர்வு காணமுடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை சந்தித்து வலியுறுத்த அனைத்து கட்சிகூட்டத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுவித்தார்.

அதன்பிறகு தான் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏக்கள் ரவிச்சந்திரன், தாயகம் ரவி மற்றும் திமுக நிர்வாகிகள், கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வட்ட செயலாளர் பாலு செய்துள்ளார்.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018