மேகாலயாவில் ஆட்சியை அபகரித்து விட்டது, பா.ஜனதா- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

மேகாலயா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்ற போதிலும், பெரும்பான்மை கிடைக்கவில்லை.

உதிரி கட்சிகளின் ஆதரவையும் பெற முடியவில்லை. எனவே, 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜனதா, உதிரி கட்சிகள் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைக்கிறது.

3 மாநில தேர்வு முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியானநிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முதல்முறையாக இதுபற்றி கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

3 மாநிலங்களில் மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் மதிக்கிறது. அங்கு மக்கள் ஆதரவை திரும்பப்பெற பாடுபட உறுதி பூண்டுள்ளது.

அதே சமயத்தில், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பு அளிக்காமல் ஆட்சி அமைத்ததுபோல், மேகாலயாவிலும் ஆட்சியை அபகரித்து விட்டது, பா.ஜனதா. இதற்காக பணபலம் மூலம் சந்தர்ப்பவாத கூட்டணியை உருவாக்கி விட்டது. அதிகாரத்தை கைப்பற்றும் வெறியில் மக்கள் தீர்ப்பை புறக்கணித்து விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018