அரியலூர் மாணவி அனிதாவாக நடிக்கும் ஜூலி

அரியலூர் மாணவி அனிதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டுவிட்டரில் வாழ்த்துகளை பலரும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அரியலூரை சேர்ந்த அனிதா, பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் கடந்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வில்  அனிதாவால் சோபிக்க முடியவில்லை. இதனால் அனிதாவின் மருத்துவர் கனவு கானல் நீராகி போனது. எனினும் துக்கம் தாளாமல் கடந்த செப்டம்பர் 1-ஆம்  தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் புரும் அதிரவலையை ஏற்படுத்தியது. 

அவரது பிறந்த நாளாக இன்று அவரை கெளரவப்படுத்தும் விதமாக ஆர்.ஜே. பிக்சர்ஸ் யார்ல்மார்ட் பெருமையுடன் வழங்கும் Dr.S. அனிதா M.B.B.S என்ற  படத்தை எடுப்பதற்க்கான அறிவிப்பாக ஒரு போஸ்ட்டரை அடித்துள்ளது. அந்த போஸ்டர் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

அந்த போஸ்டரில் அனித ஸ்டெதஸ்கோப்புடன் ஒரு தாமரை மலரில் அமர்ந்திருப்பதுப்போல் உள்ளது. மேலும் Dr.S. அனிதா M.B.B.S, பெண்ணல்ல அதையும் தாண்டி புனிதமானவள்... என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அனிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்குக்கொண்டு பிரபலமானதோடு, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குக்கொண்ட ஜூலி நடிப்பதாக தெரிகிறது.

தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018