கர்நாடகாவுக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதிருக்க, கபட நாடகங்களை அரங்கேற்றிவருகிறது மோடி அரசு!

நான்கு மாநிலங்களையும் பேச அழைத்திருப்பது; ரஜினிகாந்தை ஏவி எம்.ஜி.ஆர் சிலை திறப்பது என்று பிரச்சனையை மடைமாற்றப்பார்க்கும் மோடிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வன்மையான கண்டனம்!

 கடந்த மாதம் 16ந் தேதியன்று வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில்,                 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுவிட்டது.

காவிரி மேலண்மை வாரியத்தில் பங்கேற்கும் மாநிலப் பிரதிநிதிகளின் பெயர்களைக் கூட கடந்த ஆண்டே தெரிவித்தாகிவிட்டது.

அப்படியிருக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், ஒருதலைப்பட்சமாக கர்நாடகத்துக்கு ஆதரவாகவே நடந்துகொள்கிறது ஒன்றிய பாஜக மோடி அரசு.

அதற்காக பிரச்சனையை மடைமாற்றும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்துப் பேச என்று தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களையும் டெல்லிக்கு அழைத்திருக்கிறது மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான 42 நாள் கெடுவில் இன்றுடன் 18 நாட்கள் முடிகிறது. இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில், பிரச்சனையை கர்நாடகத் தேர்தலைத் தாண்டி இழுத்துக்கொண்டு சென்றுவிட வேண்டும் என்பதுதான் மோடி அரசின் எண்ணம். அதற்காகத்தன் 4 மாநிலங்களுடன் பேசுவதற்கான இந்த அழைப்பு.

இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தமிழகத்தில் வலுத்திருப்பதால் அதனைத் திசைதிருப்புவதற்காக நடிகர் ரஜினிகாந்தை ஏவி எம்ஜிஆர் சிலை திறப்பு என்ற ஒரு நாடகத்தையும் அரங்கேற்றியிருக்கிறது மோடி அரசு.

இப்படிப்பட்ட வேலைகளுக்கென்றே அமைச்சர் என்ற பெயரில் வைத்துக்கொண்டிருக்கிற பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் ஊடகத் துணையுடன் அந்த வேலையைச் செய்திருக்கின்றனர்.

இதில் கவனமாக இருக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு இருக்கிறது. எனவே 4 மாநிலப் பிரதிநிதிகள் சந்திப்புக்கு தமிழக அரசு உடன்படக் கூடாது.

அதில் கலந்துகொள்வது அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு எதிரானது மட்டுமல்ல; மோடியின் சூழ்ச்சிக்குத் துணைபோவதுமாகும்.

இதை மீறி, ஒருவேளை அரசியல் அழுத்தத்தின் காரணமாக அந்த சந்திப்பைத் தவிர்க்க முடியாது என்று அதில் கலந்துகொண்டாலும், அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட கெடுவிற்குள் அமைத்தாக வேண்டும் என்பதில் கறாராக, உறுதியாக இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018