இலங்கையில் 27 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மாத்திரம் கண்ணிவெடிகள் அகற்றப்படாதுள்ளன: இராணுவம்

இலங்கையில் இன்னும் 27 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மாத்திரம் கண்ணிவெடிகள் அகற்றப்படாதுள்ளதாக இராணுவம் தெரிவித்தது.

2009 ஆம் ஆண்டின் பின்னர் 2340 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டு, கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இராணுவப்பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

கண்ணிவெடிகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட 2340 சதுர கிலோமீட்டரில் 2313 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

கண்ணிவெடி அகற்றப்படாது மீதமாகவுள்ள 27 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்னும் இரண்டு வருடங்களில் முழு அளவில் கண்ணிவெடிகளை அகற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டார்.

கண்ணிவெடிகள் அகற்றப்படவுள்ள 27 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், வட மாகாணத்தின் 5 மாவட்டங்களும், திருகோணமலை, அம்பாறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன.மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் முழு அளவில் கண்ணிவெடி அகற்றப்பட்ட மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கில் பலஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் மனிதநேயப் பணியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018