மார்ச் 13ல் எதிர்க்கட்சிகளுக்கு இரவு விருந்து - சோனியா காந்தி அழைப்பு

பா.ஜ.க. ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மார்ச் 13-ம் தேதி இரவு விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டுடன் பா.ஜ.க. ஆட்சி முடிவடைய உள்ளது.

இதையடுத்து, 2019-ல் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றுதிரட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் சார்பில் மார்ச் 13-ல் டெல்லியில் நடைபெற உள்ள இரவு விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என  எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரசார் கூறுகையில், மத்தியில் பா.ஜ.க. அரசை அகற்றவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பறைசாற்றவும் இந்த விருந்து பெரிதும் உதவும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக தேசிய அளவில் புதிய அணி ஒன்றை உருவாக்க தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தி வருகிறார் என்பதும், அவரது முயற்சிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், ஐதராபாத் எம்.பி. ஒவைசி மற்றும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018