உலகக்கோப்பை குவாலிபையர் - கிறிஸ் கெயில், ஹெட்மையர் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

உலகக்கோப்பைக்கான குவாலிபையர் தொடரில் கிறிஸ் கெய்ல் மற்றும் ஹெட்மையரின் அதிரடி சதங்களால் வெஸ்ட் இண்டீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐசிசி உலகக்கோப்பை குவாலிபையர் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி கிறிஸ் கெய்ல், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

லெவிஸ் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹெட்மையர் களம் இறங்கினார். இவரும் கிறிஸ் கெய்லும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஹெட்மையர் 93 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 127 ரன்களும், கிறிஸ் கெய்ல் 91 பந்தில் 7 பவுண்டரி, 11 சிக்சருடன் 123 ரன்களும் குவித்தனர். இருவரின் ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சார்பில் ஹயாத், முஸ்தபா, ஹைடர், ரசா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து, 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக முஸ்தபாவும், சுரியும் களமிறங்கினர். வெஸ்ட் இண்டீசின் ஹோல்டரின் அபாரமான பந்துவீச்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர்கள் நிலைகுலைந்தனர்.

அந்த அணி 69 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் இறங்கிய ரமீஸ் ஷசாத் நிலைத்து நின்று ஆடினார். அவருக்கு அன்வர் ஓரளவு ஒத்துழைப்பு தந்தார். இதனால் அந்த அணி ஓரளவு ரன் குவிப்பில் ஈடுபட்டது.

ஆனாலும், அன்வர் 64 ரன்களில் அவுட்டானார். அதன்பின் முப்தி 34 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதிவரை போராடிய ஷசாத் 107 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரியுடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், ரோச் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 60 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் அணி வெற்றி பெற்றது.


Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018