சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு! சிறை மருத்துவமனையில் அனுமதி

ஜெயலலிதா மரணம் குறித்து சிறைக்கு வந்து விசாரணை நடத்தப்படும் என்று விசாரணை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் வைக்கப்பட்டுள்ள சசிகலா தரப்பில் தனது வாக்குமூலத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய ஒருவார காலம் அவகாசம் கேட்டு ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை நிராகாித்த விசாரணை ஆணையம், ஏற்கனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சசிகலா தரப்புக்கு 5 முறை அவகாசம் அளித்தும், தற்போது வரை பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் கூடுதல் காவலம் அவகாசம் தரமுடியாது.

உடனடியாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் சசிகலாவுக்கு எதிராக முடிவு எடுக்க வேண்டியது வரும். சசிகலா தரப்பில் பிரமாணப் பத்திரத்தை விசாரணை ஆணையம் முன் தாக்கல் செய்யாவிட்டால் நாங்கள் சிறைக்கு நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டியது வரும் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடா்பாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யாமல் சசிகலா தரப்பினா் கூடுதல் அவகாசம் கேட்டு விசாரணையை தாமதப் படுத்துவதாகவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தொடர்ந்து அவர் விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018