காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு

காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டதன் ஊடாக இராணுவ அதிகாரிகளை யுத்த குற்ற நீதிமன்றிற்கு கொண்டுச் செல்லும் அவதானம் இருப்பதாக தேசப்பற்றுள்ள தொழில்வல்லுனர்களில் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அதற்கு எதிராக தமது சங்கம் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் சங்கத்தின் உறுப்பினர் ஓய்வு பெற்ற ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதனிடையே, காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி உள்ளிட்ட நல்லாட்சிக்கு நன்றி தெரிவிப்பதாக காணாமல் போனோரின் குடும்பங்களின் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.அந்த அமைப்பின் இணைப்பாளர் பிறிடோ பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக உரிய முறையில் கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்துவதற்காக 70 வருடங்களின் பின்னர் நிரந்தர அலுவலகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இது வரவேற்கதக்க விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018