பொதுநலவாய விளையாட்டு விழா இலங்கை நீச்சல் குழாம் அறிவிப்பு

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டிகளுக்காக தகுதியைப் பெற்றுக்கொண்ட 6 பேர் கொண்ட இலங்கை நீச்சல் குழாமை இலங்கை நீர்நிலை விளையாட்டு சம்மேளனம் அறிவித்துள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள நீச்சல் குழாமில் 4 வீரர்களும், 2 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளதுடன், அவர்களுள் 2016 றியோ ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மெத்யூ அபேசிங்க மற்றும் கிமிகோ ரஹீம் ஆகிய அனுபவமிக்க வீரர்களும் இம்முறை பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

உபாதைக்குப் பிறகு மீண்டும் போட்டிகளுக்கு திரும்பியுள்ள மெத்யூ அபேசிங்க, அண்மையில் ஐக்கிய அமெரிக்காவின் ஒஹியோவில் நடைபெற்ற திறந்த நீச்சல் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சலில் 5ஆவது இடத்தையும், 200 மீற்றர் சாதாரண நீச்சலில் 18ஆவது இடத்தையும் பெற்றார். இதனால், பொதுநலவாய நாடுகளுக்கான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை மெத்யூ பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நீச்சல் அணிக்காக அண்மைக்காலமாக பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த கிமிகோ ரஹீமும் இம்முறை பொதுநலவாய நாடுகள் போட்டித் தொடரில் கலந்துகொள்ளவுள்ளார்.

முன்னதாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் சாதாரண மற்றும் மல்லாக்கு நீச்சல் போட்டிகளில் அவர் தங்கப்பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

19 வயதான கிமிகோ ரஹீம், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய குறுந்தூர நீச்சல் போட்டித் தொடரின் திறந்த வயதுப்பிரிவில் தான் பங்குபற்றிய 4 போட்டிகளிலும் புதிய தேசிய சாதனை படைத்திருந்தமையும் இங்கு நினைவுகூறத்தக்கது. 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018