திருப்பத்தூர் நகர ஒன்றியச் செயலாளர் ஆர். முத்துராமன், பாஜகவில் இருந்து நீக்கம்; தமிழிசை!

பாஜக நகர ஒன்றியச் செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், பாஜகவின் திருப்பத்தூர் நகர ஒன்றிய செயலாளர் ஆர்.முத்துராமன், பிரான்சிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில் சிலைகளை சேதப்படுத்துவதில் பாஜகவினருக்கு தொடர்பிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலைவர்களின் சிலைகள் உடைக்கப்படுவது துரதிர்ஷ்டமான சம்பவம் என்றும் தேசிய செயலாளர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இதையடுத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பெரியார் சிலையை சேதப்படுத்திய திருப்பத்தூர் நகர ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துராமன், பாஜகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதுபோன்ற செயல்களை பாஜக ஒருபோதும் ஊக்குவிக்காது என்று தமிழிசை தெரிவித்தார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018