முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரீதேவியின் மகள்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தனது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

உறவினர் திருமணத்தில் பங்கேற்கபதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த வாரம் சனிக்கிழமை எதிர்பாரதவிதமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, பிப்ரவரி 28 அன்று இந்தியாவுக்கு எடுத்துவரப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் மும்பை அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ், செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டது.அவரது உடலுக்கு ஏராளமான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் மார்ச் 1 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி அன்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தனது 21வது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

அங்கு அவர் கேக் வெட்டி முதியோருடன் பிறந்தநாள் கொண்டாடிய படங்களும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகின்றன.முன்னதாக, இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பிறந்தநாள் பரிசாக ரசிகர்கள் தங்கள் பெற்றோரை நேசிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018