பா.ஜ., கூட்டணியை முறிக்கிறது தெலுங்கு தேசம்?

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தினால், பா.ஜ., மீது அதிருப்தியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி ஒரிரு நாளில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறும் எனவும், முதற்கட்டமாக மத்திய அமைச்சராக உள்ள அக்கட்சியை சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ மற்றும் ஓய் எஸ் சவுத்ரி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக, தெலுங்கு தேச கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: 

நேற்று(மார்ச்.6) விஜயவாடாவில் தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. 125 எம்எல்ஏக்கள் மற்றும் 34 எம்எல்சிக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர். இதனையடுத்து பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகுவது தொடர்பான இறுதி நடவடிக்கையை முடிவை அறிவிக்க உள்ளனர். 

முதல்கட்டமாக மார்ச் 10க்குள் மத்திய அமைச்சரவையில் உள்ள தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த இரண்டு பேர் பதவி விலகுவார்கள். இதன் பின்னர் ஓரிரு நாளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அளிக்கப்படும் ஆதரவு திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018