கண்டியில் ஊரடங்கு நேரத்தில் நேற்றிரவும் வன்முறைகள் – தடுக்க முடியாமல் திணறும் படைகள்

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நேற்றிரவும் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்குறணை, வெலேகட, அம்பத்தென்ன பகுதிகளில் நேற்றிரவும், பள்ளிவாசல்கள், வாணிப நிலையங்கள், வீடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

சில இடங்களில் முஸ்லிம்களின் வாணிபங்களைக் குறிவைத்து தீவைப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட அக்குறணை முதலாம் கட்டை, 9ஆம் கட்டை பள்ளிவாசல்களுக்கு நேற்றிரவும் இன்று அதிகாலையிலும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்று, நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார்.

அத்துடன், அந்தப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

அக்குறணைப் பகுதியில், சிறிலங்கா இராணுவத்தினரின் பவல் கவசவாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழுகின்ற பகுதிகளில் பெருமளவில் படையினர் குவிக்கப்பட்டுள்ள போதிலும், வன்முறைகளை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்ற நிலை காணப்படுவதாக பிந்திக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Ninaivil

திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
மன்னார் பெரியமடு
லண்டன்
17 DEC 2018
Pub.Date: December 19, 2018
திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018