நயன்தாராவிற்கு இது 5-வது முறை

நயன்தாரா தென்னிந்திய திரை உலகில் முதல் இடம் வகிக்கும் நாயகியாக வலம் வருகிறார். சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

கலெக்டராக இவர் நடித்த ‘அறம்’ படம் பெரிதும் பேசப்பட்டது. இதுதவிர தெலுங்கில் சிரஞ்சீவி, அஜித்தின் அடுத்தபடம் என பிரபல நாயகர்கள் படங்களிலும் நடிக்கிறார். அடுத்து ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் நடிக்கிறார். இது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம்.

நடிப்புக்கு இடையிலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வருகிறார். இப்போது இருவரும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.

ஆஸ்கர் விருது விழா நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்று வந்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஜோடியாக, நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களை இருவரும் டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நயன்தாரா மலையாள முன்னணி ஹீரோ மம்முட்டியுடன் நடிக்கிறார். ஏற்கனவே 4 மலையாள படங்களில் மம்முட்டியுடன் நடித்திருக்கும் நயன்தாராவுக்கு 5-வது படம்.

இது மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டிய கதை. இதில் மம்முட்டி ராஜசேகர ரெட்டியாக நடிக்கிறார். காதலருடன் ஜாலியாக சுற்றுலா சென்றாலும், நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தும் நயன்தாராவின் திரை உலக அக்கறையை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018