கண்டி தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் அமைதியாகவுள்ளது ;பிரதமர்

கண்டி மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களின் நிலைமை அமைதியாக உள்ளது. இந்த நிலையில், பொய்யான பிரச்சாரங்களை நம்புவதை தவிர்த்து, பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என பொதுமக்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் நேற்று வெளியிட்ட விசேட அறிவித்தலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டையை அண்டிய பகுதியில் சில வர்த்தக நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பத்தென்ன பகுதியில் கலகம் விளைக்கும் வகையில் செயற்பட்ட தரப்பினர் வைத்திருந்து கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது. மேலும் மதத் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதும், அவ்வாறு எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018