சித்தராமையா உத்தரவுப்படி சிறையில் சசிகலாவுக்கு வசதிகள்: உயர் நீதிமன்றத்தில் முன்னாள் சிறைத்துறை டிஜிபி முறையீடு

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உத்தரவின்படியே சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்தேன் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் முன்னாள் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு அங்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரித்த அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா, சிறையில் சசிகலாவுக்கு டிவி, கட்டில், மெத்தை, மின்விசிறி, உதவியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும் அறிக்கை அளித்தார்.

ரூபாவின் குற்றச்சாட்டு பற்றி விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையிலான உயர்மட்டக் குழு, ''சிறையில் முறைகேடுகள் நடந்தது உண்மைதான். ரூ. 2 கோடி லஞ்ச விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்''என அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து, கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் ஊழல் தடுப்பு படை போலீஸார் கடந்த வாரம், சத்திய நாராயண ராவ் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1), 13(2) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், சத்தியநாராயண ராவ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புத்துறை தன் மீது தொடுத்துள்ள வழக்கை ரத்து செய்யுமாறு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘‘சிறைத்துறை டிஜிபியாக இருந்தபோது, மற்ற கைதிகளைப் போலவே சசிகலாவை நடத்தினேன். ஏறக்குறைய ஒரு மாதம் சசிகலாவுக்கு சிறையில் எவ்வித வசதியும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையா அழைப்பின் பேரில் அவரை சந்தித்தேன். அப்போது, ‘‘சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் வழங்கி இருக்கிறீர்கள்?’’என்று சித்தராமையா கேட்டார். அதற்கு நான், ‘‘சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளே சசிகலாவுக்கும் வழங்கப்படுகிறது’’என்றேன். அதற்கு சித்தராமையா, ‘‘சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் தமிழ்நாட்டில் இருந்து நிறைய அழுத்தம் வருகிறது.

அவருக்கு ஒரு கட்டில், மெத்தை, தலையணை மட்டும் கொடுங்கள்’’ என கூறினார்.முதல்வர் சொன்னதால், நான் சசிகலாவுக்கு கட்டில், மெத்தை, தலையணை வழங்கினேன். வேறு எந்த வசதியும் செய்து தரவில்லை’’ என சத்தியநாராயண ராவ் தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி வினீத் கோத்தாரி, வினய்குமார் அறிக்கை, ஊழல் தடுப்புத்துறை போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றை வரும் 13-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.

சித்தராமையா கூறும்போது, ‘‘சத்தியநாராயண ராவ் எனக்கு எதிராக பொய்களை சொல்லியுள்ளார். சிறை விதிமுறைகளின்படி மற்ற கைதிகளுக்கு வழங்கும் வசதிகள் போல் சசிகலாவுக்கும் வழங்க கூறினேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018