பெரியார் பற்றி விமர்சனம்: மோடி, அமித்ஷா ஆதரவில் எச்.ராஜா பேசுகிறார் - வைகோ குற்றச்சாட்டு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வல்லபாய் படேலுக்கு ரூ.3000 கோடியில் சிலையா? மராட்டிய மாவீரன் சிவாஜிக்கு ரூ.3,500 கோடியில் சிலையா? என்று நாங்கள் கேட்கவில்லை.

ஆனால் உலகம் புகழுகின்ற சமூக சீர்திருத்தவாதி பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று சொன்ன ராஜா டெல்லியில் இருந்து திரும்பி வந்து இன்று காலையில் பெரியாரை மீண்டும் தாக்க என்ன காரணம். பிரதமர் மோடி கொடுக்கின்ற ஆதரவு. அது எச்.ராஜாவின் குரல். பின்னணி குரல் மோடியின் குரல். அமித்ஷாவின் குரல்.

எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அமித்ஷா சொல்கிறார். எச்.ராஜாவின் பின்புலத்தில் மோடியும், அமித்ஷாவும் இருக்கிறார்கள்.

பெரியாரை பற்றி ஐ.நா.வின் கல்வி அறிவியல் பண்பாட்டு கழகம், யுனெஸ்கோ 1970 ஜூன் 27-ந்தேதியன்று கூறுகையில், “பெரியார் புத்துலக தொலை நோக்காளர், மறுமலர்ச்சி தூதர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று கூறுகிறது. உலக நாடுகளின் மன்றம் சொல்கிறது.

அவருக்கு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட்டபோது, “போராளி, புரட்சியாளர், பகுத்தறிவாளர், எளிமையும், மனிதநேயமும் கொண்டவர் என்று கூறியுள்ளது.

ராஜாஜிதான் அவருக்கு தொடக்க காலத்தில் இருந்து கடைசி காலம் வரை உயிர் நண்பர். தமிழ்நாடு பிராமணர் சங்கம் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. பெரியார் மையம் இடிக்கப்பட்ட போது வீரமணி துடித்த போது அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் போய் சொன்ன போது பெரியார் மையத்தை விட ஆயிரம் மடங்கு விலை கொண்ட இடத்தை கொடுக்க முடிவு செய்தவர்.

வி.பி.சிங், இரா.செழியன், வீரமணியை பக்கத்தில் வைத்துக் கொண்டு வைகோ சொல்லும் இடத்தை கொடுங்கள் என்று வாஜ்பாய் கூறினார். அந்த பெரியார் மையம் திரும்ப கட்டப்பட்டது. முன்பு இடிக்கப்பட்ட இடமும் திராவிடர் கழகத்துக்கு போய் சேர்ந்தது.

எனவே பா.ஜனதா என்ற ஒட்டு மொத்த கட்சியை நான் விமர்சிக்கவில்லை. பெரியார் மையம் இடிக்கப்பட்டதற்கு அத்வானி அன்றைக்கு அவ்வளவு வருத்தப்பட்டார்.

இங்கே பெரியார் சிலையை அகற்றுவோம் என்று சொன்ன இரவில் 2 பேர் பெரியார் சிலையின் முகத்தை சிதைத்திருக்கிறார்கள். அதை டீக்கடைக்காரர் பார்த்து அவர்களை பிடித்து கொடுக்க வேண்டியதை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இவ்வளவுக்கு பிறகும் இந்த திமிரும் தைரியமும் எச்.ராஜாவுக்கு யார் கொடுத்தது. தமிழ் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவர் தந்தை பெரியார். அதை சட்டமாக்கி கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.

தமிழகத்தில் எச்.ராஜாவை குரங்கு குட்டியை விட்டு தண்ணீரில் ஆழம் பார்ப்பது போல அவரை பேச விட்டு தமிழர்களின் உணர்வுகளை சோதித்து பார்க்கிறார்கள். தமிழர்கள் சுயமரியாதை மிக்கவர்கள். வேங்கைகள் உலவும் காடுகளில் நரி ஊளையிடுவது போல எச்.ராஜா பேசி வருகிறார்.

பெரியார் பற்றி சொன்ன கருத்துக்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகம் பெரியாரின் கோட்டை. அந்த கோட்டையின் காவலர்களாக நாங்கள் இருக்கிறோம். கோட்டையை சரித்து பார்க்கலாம் என்று பா.ஜனதா அரசு நினைக்கிறது. அந்த கோட்டையை நாங்கள் உயிரைக் கொடுத்தாவது காப்போம். எச்.ராஜா இதுபோல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.

நான் அரசியலில் 54 வருடம் ஈடுபட்டு பொது சேவையில் உள்ளவன். நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி நாலைந்து நாட்கள்தான் ஆகிறது. அவர் நாவை அடக்கி பேச வேண்டும். என்னை வெட்டி பேச்சு பேசுபவர் என்று கமல் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அனைத்து சிலைகளையும் அகற்ற வேண்டும் என்று அவர் கூறினார். கமல் தகுதி, வரம்பை மீறி பேசக்கூடாது. எச்சரிக்கையாக பேச வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018