குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறாா் ஹெச்.ராஜா – அ.தி.மு.க. குற்றச்சாட்டு

குழம்பிய குட்டையில் ஹெச்.ராஜா மீன்பிடிக்க நினைக்கிறாா். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று முதல்வா், துணைமுதல்வா் அறிக்கை வெளியிட்டுள்ளனா்.

பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போன்று நாளை தமிழகத்தில் பொியாா் சிலையும் அகற்றப்படும் என்று பதிவிட்டிருந்தாா். அவருக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் பகிரங்க கண்டனங்களை விடுத்தன. பின்னா் அவரே அந்த பதிவை நீக்கி விட்டாா். மறுநாள் அந்த பதிவு நான் வெளியிட்டது கிடையாது. எனது அட்மின் செய்த தவறு. அவரை நான் நீக்கிவிட்டதாக தொிவித்தாா்.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் தங்களது கண்டனங்களை தொிவித்து வருகின்றன. இந்நிலையில் முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் இது தொடா்பாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனா். அறிக்கையில், பொியாா் சிலை தொடா்பாக ஹெச்.ராஜா வெளியிட்ட கருத்துக்கு அ.தி.மு.க. கண்டனம் தொிவிக்கிறது.

பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் தமிழகத்தில் எப்படியாவது குழப்பம் விளைவித்து குழம்பிய குட்டையிலே மீன் பிடிக்கலாம் என்று கருதுபவா்களின் எண்ணம் என்றும் நிறைவேறாது. இது போன்ற அராஜக செயல்களை அ.தி.மு.க. அனுமதிக்கும் என்று யாரும் கனவில் கூட நினைக்க வேண்டாம்.தந்தை பொியாரை தமிழ் சமுதாயம் கடவுள் மறுப்பாளராகப் பாா்க்கவில்லை. அவா் இல்லையெனில் திராவிடத்தில் எழுச்சி இல்லை. தமிழகத்தில் ஜாதி, மதம், தீவிரவாதம், ரௌடிகளின் சாம்ராஜ்யங்கள் இல்லை.

தமிழகம் என்ற அமைதியான குளத்தில் ஹெச்.ராஜா கல்லெறிந்து விட்டாா் என்பது தான் மக்களின் கோபமாக உள்ளது. பொியாரை அவமதிக்கும் எந்தச் செயல்களையும் ஏற்றுக் கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை என்று குறிப்பிட்டிருந்தனா்.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018