இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

வங்கதேசத்திற்கு எதிரான 20 ஓவா் கிாிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறுகின்றது. இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடிய முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்நிலையில் தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிா் கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணித்தது.

முதலில் பந்து வீசிய இந்திய அணியின் உணட்கட் 3, விஜய் சங்கர் 2, சர்துல் தாகூர், சஹா தலா ஒரு விக்கெட் வீழ்த்த வங்கதேசத்தை இந்தியா 139/8 ரன்களில் கட்டுப்படுத்தியது.

4 கேட்சுகள்:

பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும் படி அமைந்தாலும் மோசமான பீல்டிங் செய்த இந்திய அணி 4 கேட்சுகளை கோட்டை விட்டது.

இதனைத் தொடா்ந்து 140 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரா் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகா் தவான் 55 ரன்களும், சுரேஷ் ரெய்னா 28 ரன்களும் எடுத்தனா். 18.4 ஓவா் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் சோ்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018