சகல இனங்களுக்கும் அரசியலமைப்பினூடாக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்

அரசியலமைப்பின் ஊடாக சகல இனங்களுக்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுயாதீன சட்டத்துறை, சர்வமதத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையர் என்ற ரீதியில் சகல இனத்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கண்டி திகன பகுதியில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்து விடுத்திருக்கும் அறிக்கையிலேயே சபாநாயகர் கரு ஜயசூரிய இந்தக் கருத்துக்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை இருண்ட  யுகத்துக்கு இழுத்துச் செல்லும் நோக்கில் இனவெறி நோக்கத்துடன் முன்னெடுக்கும் செயற்பாடுகள் இடம்பெறாமல் இருப்பதை நீதிக் கட்டமைப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மற்றும் ஏனைய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கவலையளிக்கின்றன. எமது நாட்டு சட்டங்களுக்கு அமைய சகல இனத்தவர்களும் சமமானவர்கள். சட்டத்தை மீறி எமது மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எண்ணெய் ஊற்றும் விதத்திலான சூழ்ச்சிகளில் சில அரசியல் பின்னணிகள் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. 2014ஆம் ஆண்டில் இதுபோன்ற வன்முறைகளை கண்டுள்ளோம்.

நாட்டில் சில பிரிவுகளுக்கு எதிராக பிளவினை ஏற்படுத்துவதற்கு எதிராக சகல மதத் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன். இவ்வாறான செயற்பாடுகளை சகல மதத் தலைவர்களும் கண்டிப்பதுடன், இவற்றுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எமது நாட்டின் அரசியலமைப்பானது சுதந்திரம், சமத்துவம், அடிப்படை மனித உரிமை என்பவற்றை சகலருக்கும் உறுதிப்படுத்துகிறது. இதனை பாதுகாப்பதற்கு அல்லது உறுதிப்படுத்துவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

அமரர் தபோதினி கௌறிராம்
அமரர் தபோதினி கௌறிராம்
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
28 ஓகஸ்ட் 2018
Pub.Date: September 26, 2018
திரு வல்லிபுரம் பாலகுமார்
திரு வல்லிபுரம் பாலகுமார்
யாழ். கரவெட்டி
கனடா
24 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 26, 2018
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018