ஆன்மீக பயணமாக நாளை இமயமலை செல்கிறார் ரஜினி

அரசியலில் களமிறங்கியிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், நாளை ஆன்மீக பயணமாக இமயமலை செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் சிம்லா செல்லும் ரஜினிகாந்த், அங்கிருந்து ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளார்.

ரிஷிகேஷில் தாம் கட்டியிருக்கும் பாபாஜி ஆசிரமத்தின் விரிவாக்க பணிகளை அவர் பார்வையிடுகிறார். ஒரு வார காலம் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ரஜினிகாந்த் ஆன்மீக குருமார்களை சந்தித்து ஆசி பெற இருக்கிறார். 

தீவிர அரசியல் பணிகளுக்கிடையே ரஜினி இமயமலை செல்ல உள்ளார். கடந்த சில நாட்களாக மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியில் ரஜினி ஈடுபட்டு வந்தார்.

அரசியலில் ஈடுபட்டாலும் திரைப்படங்களில் ரஜினி தொடர்ந்து  நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடித்துள்ள `காலா’ திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து  இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் ரஜினி நடிக்க இருக்கிறார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018