இனவாதத்தை ஒழிக்க இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை- முஜிபுர் ரஹ்மான்

அரசாங்கம் என்ற வகையில் கடந்த இரண்டரை வருட காலமாக இந்த இனவாதத்தை ஒழிப்பதற்கு எடுத்த செயற்பாடுதான் என்னவென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

நாம் மனச்சாட்சிக்கு முரணில்லாமல் இங்கு மீட்டிப்பார்ப்போம். நாம் அரசாங்கம் என்ற வகையில் இந்த இனவாதத்தை நிறுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது நான் ஜனாதிபதியிடம் தனிப்பட்ட முறையில் இதுபற்றிக் கூறினேன். சமூக வலைத்தளங்களிலும், ஒவ்வொரு இடங்களிலும் முஸ்லிம்களை இலக்கு வைத்து மோசமான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனைச் சட்டத்தினால் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தேன். பிரதமரிடம் கூறினேன். பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்று மூன்று நான்கு தடவைகள் தனிப்பட்ட ரீதியில் முறைப்பாடுகள் செய்துள்ளேன்.

இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்க வில்லை. அரசாங்கத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதையிட்டு  நான் வெட்கப்படுகின்றேன்.

பொட்டு அம்மான் எங்கு இருந்தது என்பதை தேடிக் கொள்ள முடிந்தது. பிரபாகரன் எங்கு இருந்தது என்பதை கண்டுகொள்ள முடிந்தது. இப்படியான எமது புலனாய்வுத் துறைக்கு ஏன் இந்த இனவாத சூத்திரதாரிகள் யார் என்பதை மட்டும் உரிய நேரத்தில் கண்டறிந்து கொள்ள முடியாமல் போனது என்பது மட்டும் புதுமையாகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

Ninaivil

அமரர் தபோதினி கௌறிராம்
அமரர் தபோதினி கௌறிராம்
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
28 ஓகஸ்ட் 2018
Pub.Date: September 26, 2018
திரு வல்லிபுரம் பாலகுமார்
திரு வல்லிபுரம் பாலகுமார்
யாழ். கரவெட்டி
கனடா
24 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 26, 2018
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018