கவுரி லங்கேஷ் கொலையில் முக்கிய குற்றவாளி கைது

கர்நாடக மாநிலம் பெங்ளூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உளவுப்பிரிவு ஐ.ஜி பி.கே.சிங்.தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி.) போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேகப்படும் குற்றவாளிகள் 2 பேரின் 3 உருவங்கள் அடங்கிய புகைப்படங்களை போலீசார் வெளியிட்டும் இதுவரை கொலையில் எந்த துப்பும் துலங்கவில்லை.

கொலையாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில் மதூர் பகுதியில் ஆயுதம் கடத்தியதாக பிரவீன் குமார் என்பவரை கடந்த மாதம் 18-ம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவரது பெயர் பிரவீன்குமார் என்பதும், இந்து யுவசேனா என்ற அமைப்பினைச் சேர்ந்தவர் என்பதும் கவுரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018