ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்- முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்கா 39/1

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், பான்கிராப்ட் களமிறங்கினர். வார்னர் அரைசதம் அடித்து அசத்தினார். பான்கிராப்ட் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இறங்கிய கவாஜா 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வார்னர் 63 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய ஸ்மித் உடன் ஷேன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். தேனீர் இடைவேளைக்கு சற்று முன் ஸ்மித் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்தவர்களை ரபாடா விரைவாக பெவிலியனுக்கு அனுப்பினார். ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களுக்கு எடுத்திருந்த ஆஸ்திரேலியா 170 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்தது. இறுதியில், ஆஸ்திரேலியா அணி 71.3 ஓவரில் 243 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஹசில்வுட் 10 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், நிகிடி 3 விக்கெட்டும், பிலெண்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதைத்தொடர்ந்து, தென் ஆப்ரிக்கா அணி ஆட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டீன் எல்கரும், மார்கிரமும் களமிறங்கினர்.

அணியின் எண்ணிக்கை 21 ஆக இருக்கும்போது மார்கிரம் 11 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ரபடா இறங்கினார். பவுலிங்கில் அசத்திய அவர் பேட்டிங்கிலும் அதிரடி காட்டினார். அவர் 14 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் எல்கர் 11 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்க அணி 12 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை விட 204 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018