ஐ.நா.தீர்மானத்தை அமுல்படுத்த கடும் நிபந்தனையுடன் கால அவகாசம்; த.தே.கூ கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட விசேட சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை வவுனியாவில் உள்ள விருந்தினர் நடைபெற்றது.

எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் காலை 9.30முதல் மாலை 4.30வரையில் நடைபெற்றது. 

இந்த சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தனித்தனியாக தமது கருத்தை முன்வைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்ததோடு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐ.நா விடயங்களை கையாண்டு வருபவரும் தமிழரசுக்கட்சியின்  சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்களால் பதில்கள் அளிக்கப்பட்டன. 

விசேடமாக ஐ.நாவின் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது நியாயப்பாடுகளை தமது கருத்துக்களை தெரிவித்த சமயத்தில் குறிப்பிட்டிருந்தனர். 

இந்த விசேட கூட்டத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள சுமந்திரன் எம்.பி உள்ளிட்ட அனைத்து பிரதிநிதிகளும் ஒரேயிடத்தில் சங்கமித்திருந்தமையால் கூட்டம் நடைபெற்ற விருந்தினர் விடுதியைச் சுற்றியும் வவுனியா நகரிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் காலை முதல் மாலை வரையில் காணப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்த கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் விசேடமாக  ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

அதில் நடைபெற்று வரும் விடயங்கள் தொடர்பாக அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக இந்த கூட்டத்தொடரின் போது இலங்கை சம்மந்தமான தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கின்றது. 

இந்த சூழ்நிலையில் ஒரு உத்தியோகபூர்வமான வரைபு ஒன்றை சில நாடுகள் முன்வைத்திருக்கின்ற நிலைமையில் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களுடைய நிலமையை ஒருமித்து எடுத்துச் சொல்வதற்காக நாள் முழுவதும் நாங்கள் கருத்து பரிமாறல்களைச் செய்திருந்தோம். அந்த கருத்துப்பரிமாறல்களின் ஈற்றில் தீர்மான்களை எட்டியிருந்தோம். 

அத்தீர்மானங்களாவன, 

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையால் 2015 ஐப்பசி முதலாம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட எச்ஆர்சி 30- 1 என்ற தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்றவேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை வழிடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். 

இவை நிறைவேற்றப்படுவதை கடுமையான நிபந்தனையின் கீழ் ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் நிறுவப்பட்டு, மேற்பார்வை செய்யப்பட வேண்டும். 

இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறைகளின் மூலம் நிறைவேற்றத் தவறினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த தீர்மானத்தின் மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக சர்வதேச பொறிமுறையை ஐக்கிய நாடுகள் பேரவை உறுதிசெய்ய வேண்டும். 

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி கட்சியின் செயலாளர் நடேசு சிவசக்தி ஆனந்தன் அவர்கள் இந்த தீர்மானத்தோடு தங்களது கட்சி இணங்க உடன்பாடில்லை என்பதையும் தெரிவித்தார் என்றார். 


Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018