சிங்களவர் மனங்களில் ஏற்படுத்தப்பட்ட அச்சமே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்

சிங்கள மக்களின் மனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற அச்சமே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமாகியிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றஞ்சாட்டினார்.

சிங்கள இளைஞர் உயிரிழந்தமையே திகன வன்முறைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. எனினும், உயிரிழந்த இளைஞரின் கிராமமான அம்பாள கிராமத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு வன்முறையும் இடம்பெறவில்லை எனவும் அவர் கூறினார்.

வணிக கப்பற்றொழில் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2000ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நாட்டை ஒரு நிலைக்குக் கொண்டுவருவதற்கு மக்கள் மூன்று சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தனர். முதலாவது சந்தர்ப்பம் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின்னரான நிலைமையாகும்.

இதனால் நாட்டுக்கு பாரிய அழிவு ஏற்பட்டிருந்தாலும் நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு சகலரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு வழி ஏற்படுத்தியிருந்தனர். அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது. எனினும், தனது அதிகார மோகத்தினால் அதனை தவறவிட்டிருந்தார்.

2015ஆம் ஆண்டு மற்றுமொரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. மக்களால் வழங்கப்பட்ட ஆணையும் இந்த ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படவில்லை. எமது நாட்டு மக்கள் 13 வருடங்களில் நாட்டை தேசிய ரீதியில் ஓரிடத்துக்குக் கொண்டுவந்து முன்னேற்றிச் செல்லுவதற்கான சந்தர்ப்பத்தை மூன்று தடவைகள் வழங்கியிருந்தார்கள். ஆனால் எத்தனை சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டாலும் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல தம்மால் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.

தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள இனவாத சூழலில், நாடு பிளவுபடப்போகிறது, விடுதலைப் புலிகள் மீண்டும் மீட்சிபெறப் போகின்றனர், சிங்கள இனம் குறைந்து செல்கிறது, பௌத்த மதஸ்தலங்கள் நாசமாக்கப்படுகின்றன போன்ற உளரீதியான அச்சமொன்று சிங்கள மக்களின் மூளைகளுக்குள் செலுத்தப்பட்டுள்ளது. பொதுவாக சிங்கள இனவாதிகள் எனக் கூறுபவர்களுக்கும் அப்பால், சாதாரண சிங்கள மக்களின் மூளைகளிலும் நாடு முடிந்துவிட்டது என்ற அச்சம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அச்சமடைவது போன்று எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறவில்லை. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாதங்கள் இருக்கின்றபோதும், உறுதியான காரணங்கள் எதுவும் இவற்றுக்கு இல்லை.

அம்பாறையில் இடம்பெற்ற சம்பவத்தை எடுத்து நோக்கினால், சாப்பாட்டுக்குள் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மாத்திரை இருப்பதாகக் கூறியே பிரச்சினை ஆரம்பித்தது. உண்மையில் முஸ்லிம் கடையொன்றுக்கு சிங்கள இளைஞர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். உணவுக்குள் இருந்தது மாத்திரை இல்லை, சாதாரண மா உருண்டை என்பதை இரசாயன பகுப்பாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மக்களின் மனங்களில் தேவையில்லாத அச்சம் உருவாக்கப்பட்டமையே இதற்கு பிரதான காரணமாகும்.

சிங்கள இனம் குறைந்து செல்கிறது, பௌத்த மதஸ்தலங்கள் அழிக்கப்படுகின்றன எனக் கூறுபவர்களிடம் இவற்றுக்கான சாட்சியங்கள் அல்லது தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் கூட இல்லை. சகல இனங்களுக்கும் இடையில் அடிப்படைவாதம் உள்ளது என்பது மறுப்பதற்கு இல்லை. சிங்கள மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் அந்த மக்களை தேவையான பக்கத்துக்கு அழைத்துச் செல்ல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

சகல மதங்களிலும் இனவாதம் ஊறியுள்ளது. சிங்கள இனவாதமும் அப்படித்தான் காணப்படுகிறது, முஸ்லிம் இனவாதமும் அப்படித்தான் காணப்படுகிறது. யுத்தம் காரணமாக தமிழ் இனவாதம் குறைந்துள்ளது. ஆனால் இனவாத நிலைமை இருந்தாலும் தாக்குதல் சம்பவங்களாக மாறியமை குறைவாகும்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும்வரையும் முஸ்லிம்கள் தமது கடமைகளைச் செய்துகொண்டே இருந்தனர். எனினும், யுத்தம் நிறைவடைந்த பின்னர் அரசியல்வாதிகளுக்கு விற்பனை செய்வதற்கு எதுவும் இருக்கவில்லை. எனவே முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கினர். 2010ஆம் ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பின்னரே நாட்டில் முன்னர் இருந்திராத ஹலால் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இனமுறுகல் ஏற்படுத்தப்பட்டது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் கலாசார ரீதியில் மாற்றங்கள் இருக்கின்றன.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018