ஸ்ரீதேவியை ஞாபகப்படுத்தும் ஜான்வி

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் புகைப்படம் ஒன்று, ஸ்ரீதேவியை ஞாபகப்படுத்தும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி. இவர் தற்போது ‘தடக்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். 2016-ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான ‘சைரத்’ படத்தின் இந்தி ரீமேக்தான் ‘தடக்’. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் ஷாஹித் கபூரின் சகோதரர் இஷான் நடிக்கிறார்.

இதனை சஷாங் கைத்தான் இயக்கி வருகிறார். ‘தர்மா புரொடக்ஷன்ஸ் – ஜீ ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. ஏற்கனவே, இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.

படத்தை இந்தாண்டு (2018) ஜூலை 20-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில், நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்ததால் ‘தடக்’ படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, மீண்டும் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் ஜான்வி கபூரும் கலந்து கொண்டிருக்கிறார்.

தற்போது அதன் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்தப் புகைப்படம் ஸ்ரீதேவியை ஞாபகப்படுத்தாக இருக்கிறது. புடவையில் ஸ்ரீதேவி எப்படி இருப்பாரோ அதுபோல் அந்த புகைப்படம் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறிவருகிறார்கள். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018