டில்லியில் பிரான்ஸ் அதிபருக்கு உற்சாக வரவேற்பு

4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு ஜனாதிபதி மாளிகையில், ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். டில்லி விமான நிலையத்தில் பிரான்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் மேக்ரானுக்கு முப்படையினர் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபரையும், அவரது மனைவி பிரிகிட்டி மேக்ரானையும் ஜனாதிபதி ராம்நாத், அவரது மனைவி சவிதா, பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.

வரவேற்புக்கு பின்னர் மேக்ரான் கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையே சிறந்த புரிந்துணர்வு உள்ளது . இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையே வரலாற்று ரீதியான உறவு உள்ளதாக தெரிவித்தார். பின்னர், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

பிரான்ஸ் அதிபரும் பிரதமர் மோடியும் டில்லியில் இன்று (மார்ச் 10) பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தொடர்ந்து, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள மேக்ரான், மார்ச் 12-ம் தேதி உ.பி. மாநிலம் வாரணாசி செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018