வீரர்களுக்கு சம்பள உயர்வு- டோனியின் பெருந்தன்மை

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி நிர்வாகக் குழு சமீபத்தில் உத்தரவிட்டது.

முதல் முறையாக ‘ஏ பிளஸ்’ கிரேடு உருவாக்கப்பட்டது. இந்த கிரேடுக்கான சம்பளம் ரூ.7 கோடியாக நிர்ணயிக்கப்படுகிறது. கேப்டன் விராட்கோலி, ரோகித் சர்மா, தவான், பும்ரா, புவனேஸ்வர்குமார் ஆகிய வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

3 அளவிலான (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) போட்டிகளில் ஆடுபவர்கள் மட்டுமே இந்த பிரிவில் இடம் பெற முடியும். அதே நேரத்தில் ஏதாவது ஒன்றில் ‘டாப் 10’ வரிசையில் இடம் பெற்று இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் ‘ஏ பிளஸ்’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

‘ஏ பிளஸ்’ கிரேடு உருவாவதற்கு கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் டோனி ஆகியோர்தான் காரணமாக இருந்தனர்.

இந்த பிரிவுக்கான சம்பளம், அதில் தான் இடம் பெற முடியாது என்று தெரிந்து இருந்தும் மற்ற வீரர்களின் சம்பளத்துக்காக டோனி உதவியாக இருந்தார். அவரது தன்னலமற்ற மற்றும் பெருந்தன்மையை இது காட்டுகிறது.

டோனி ஒருநாள் போட்டியிலும், 20 ஓவரில் மட்டுமே ஆடி வருகிறார். டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

விராட்கோலி உள்ளிட்ட 5 வீரர்கள் ‘ஏ பிளஸ்’ கிரேடில் ரூ.7 கோடி சம்பளம் பெற அவர் உதவியாக இருந்துள்ளார். டோனி ‘ஏ’ கிரேடில் ரூ.5 கோடி ஊதியத்தில் உள்ளார்.

இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு நிர்வாகி வினோத்ராய் கூறியதாவது:-

டோனி, கோலி ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில்தான் ‘ஏ பிளஸ்’ என்ற உயர்மட்ட பிரிவு உருவாகிறது. 3 வடிவிலான போட்டிகளில் ஆடுபவராக இதில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆட்டத்திறமைக்கு ஏற்ற பரிசு.ஆகவே எந்த ஒரு நிலையிலும் நிரந்தரமாக வீரர் இருக்க முடியாது. சரியாக ஆடவில்லை என்றால் கீழே உள்ள பிரிவுக்கு தள்ளப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018