மக்கள் இராணுவத்தை நம்ப வேண்டும் : இராணுவத் தளபதி!

பாதுகாப்புத்துறைகளில் மக்கள் நம்பிக்கை வைத்தால் இனவாதத்தினை ஒழிக்க முடியுமென இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘வன்முறைச் சம்பவங்களால் நாட்டில் அசாதாரண சூழல் நிலவுவதுடன், மக்கள் மத்தியில் பதற்றநிலையும் காணப்படுகின்றது. இவ்வாறான நிலைமைகளில் நாட்டின் இனங்களுக்கிடையில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

குறித்த வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் தனது முழுமையான பங்களிப்பினை வழங்கியிருந்தது. எதிர்காலத்திலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் தோன்றாமலிருக்க இராணுவம் மற்றும் பாதுகாப்புத் தரப்பு தயார் நிலையில் உள்ளது.

அத்துடன் நாட்டு மக்கள் பாதுகாப்புத் துறையில் நம்பிக்கை வைத்து அவர்களுடன் இணைந்து செயற்படுவதால் இவ்வாறான வன்முறைச்சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதுடன், மீண்டும் அவை தோன்றாமலிருக்க நடவடிக்கைகளை எடுக்கலாம்.

நாட்டில் நிலையான அமைதியையும் சமாதானத்தினையும் ஏற்படுத்தப் பாதுகாப்புத்துறை எந்நேரமும் தயாராக இருப்பதுடன், நாட்டில் குழப்பநிலையினை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக சகல நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராகவே உள்ளது’ என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

அமரர் தபோதினி கௌறிராம்
அமரர் தபோதினி கௌறிராம்
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
28 ஓகஸ்ட் 2018
Pub.Date: September 26, 2018
திரு வல்லிபுரம் பாலகுமார்
திரு வல்லிபுரம் பாலகுமார்
யாழ். கரவெட்டி
கனடா
24 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 26, 2018
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018