வன்முறைகளைத் தடுக்க அரசாங்கம் தவறியது - ரோசி சேனாநாயக்க அதிருப்தி

கண்டி மாவட்டத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் அதிர்ச்சியையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.அதேவேளை இந்த இன வன்முறைகள் பரவ விடாது ஆரம்பத்திலேயே தடுக்காதிருந்த அரசாங்கத்திற்கும் அவர்  கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

எமது சகோதரர்கள் மீதானஇன வன்முறைகளை நிறுத்துவோம் என்ற தலைப்பில் கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோசி சேனாநாயக்க நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றார்.

ஒரு தேசத்தைச் சேர்ந்த மக்களான நாம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன வன்முறைகள் மற்றும் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் உதாசீனமாக இருந்தால் இவை எமது எதிர்கால சந்ததியினரையும் அழித்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதனால் கண்டியில் கட்டவிழ்த்துவிட்டப்பட்டது போன்ற இன வன்முறைகளுக்கான முழுப் பொறுப்பையும் நாட்டின் மக்களாகிய அனைவரும் ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு நமக்கிடையிலேயே குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டு மீண்டும் ஒரு முறை இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாது தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இவ்வாறான இன வன்முறைகள் ஏற்படாது தடுக்க ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆட்சியில் உள்ளவர்களுக்கு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் ரோசி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் அம்பாறை – கண்டியில் நாம் அதனை செய்யாது விட்டதால் தோல்வியடைந்துள்ளது மாத்திரமன்றி பெரும் அழிவையும் சந்தித்துவிட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாம் இன்னமும் தாமதமாகவில்லை என்று தெரிவித்துள்ள அவர் குரோதத்தையும் இன – மதவாதத்தையும் பரப்புபவர்களுக்கு எதிராக இலங்கையர்கள் என்ற ரீதியில் அனைவரும் அணி திரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் இதுவே தேசப்பற்றாகும் என்றும் ரோசி சேனாநாயக்க தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018