புதிய சர்வதேச சவால்களை உண்டாக்கி விட்ட கண்டி கலவரம் ;ரணில் கவலை

நாட்டின் விவசாயத்துறையினை பாதித்துள்ள பெரும் வறட்சி தான் எமக்கு முன்னாள் இருந்த பெரும் சவால் என எண்ணி இருந்தோம்.

ஆனால் அண்மைய கலவரங்கள் உள்ளூர் மட்டுமன்றி சர்வதேச அளவில் பெரும் சவாலை உண்டாக்கி உள்ளது என கவலை வெளியிடடார், கண்டிக்கு வந்த பிரதமர்.

சுற்றுலாத் துறையில் இந்தாண்டு பெரும் வளர்ச்சி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். இன்றய நிலையில் இது உறுதியாக சொல்ல முடியாததாக உள்ளது. எதிர்பார்த்த வளர்ச்சியினை இந்த துறை அடையும் என்பது சந்தேகம் என்றார் ரணில்.

ஒரு விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பினும் அதன் முடிவு வரும் வரை காத்திருக்க முடியாது. உயிர், உடமை  இழந்தவர்களுக்கு நஷ்ட்டஈடு வழங்கப் பட வேண்டும்.

456 வீடுகள், வியாபார நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. 86 முழுதாகவும், 196 பகுதியாகவும், 182 சிறிய அளவிலும் அழிக்கப் பட்டு உள்ளன.

இந்த கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் வெளிகாட்டப் படுவர் என பிரதமர் தெரிவித்தார். போலீசார் சமூக வலைத்தளங்கள் மூலமான பங்களிப்பு குறித்த விசாரணைகளை நடத்துகின்றனர். முதல் கட்ட விசாரணையில் முன்னணிப் பாடசாலை இரண்டின், இரு மாணவர்கள் குறித்த அறிக்கை ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார் அவர்.

மேலும் சிலர் தாம் சார்ந்த மதத்துக்கு விரோதமான வகையில் பேசி உள்ளார்கள். மகாசங்கம், நாட்டின் மத புரிந்துணர்வு, நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வுகளை உண்டாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் ரணில். 

அக்குரணையில் முஸ்லீம் மக்கள் பலாத்காரமாக குடியேறவில்லை, 2ம் ராஜசிங்க மன்னரின் வேண்டுதலின் பேரிலேயே வந்து குடியேறினார்கள் என்ற வரலாற்று விசயத்தினையும் பிரதமர் குறிப்பிடடார். 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018