அரசியல் பேச விரும்பவில்லை: இமாச்சலில் ரஜினி பேட்டி

ஆன்மிக பயணமாக இமயமலைக்கு வந்துள்ளேன். இங்கு அரசியல் பேச விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள ரஜினிகாந்த், நேற்று முன்தினம் 15 நாள் பயணமாக இமயமலைக்கு சென்றார்.

இமாச்சல பிரதேசத்தில் உள் கங்கரா நகர் வந்தார். அங்கிருந்து பாலம்பூர் மாவட்டம் கன்ட்படி கிராமத்தில் உள்ள மகாவதார் பாபா ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்து வருகிறார். அங்கு அவர் 10 நாளுக்கு மேல் தங்கியிருப்பார் என தெரிகிறது. ஆசிரமத்தில் இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜ மாநில தலைவருமான பிரேம்குமார் துமாலை ரஜினி சந்தித்தார். 

அங்கு தன்னை சந்தித்த சிலருடன் ரஜினி போட்டோ எடுத்துக்கொண்டார். அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. நேற்று நிருபர்களை சந்தித்த ரஜினி், ‘ஆன்மிக பயணமாக இங்கு வந்துள்ளேன். இந்த பயணம். வழக்கத்தை விட வேறு மாதிரியாகவும், புனிதமானதாகவும் உள்ளது. இங்கு அரசியல் பேச விரும்பவில்லை’ என்றார்.

பாஜ தலைவருடன் அரசியல் பேசினாரா?

இமாச்சலபிரதேசம் சென்றுள்ள ரஜினிகாந்த், அங்கு நேற்று அம்மாநில பாஜ தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரேம்குமார் துமாலை சந்தித்து பேசினார்.

அப்போது, தனது அரசியல் பிரவேசம் குறித்தும் தமிழக அரசியல் சூழல் குறித்தும் ரஜினி அவருடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. தனது அரசியல் திட்டங்கள் குறித்தும் துமாலிடம் ரஜினி விளக்கினார் என தெரிகிறது. இந்த சந்திப்பின்போது செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018