ஐ.எஸ்.எல். கால்பந்து - சேத்தியின் அபார ஆட்டத்தால் புனேவை வீழ்த்தியது பெங்களூரு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியின் மூன்றாவது சுற்றில் சேத்தியின் அபார ஆட்டத்தால் புனே அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது. 

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடித்ததன் அடிப்படையில் அரையிறுதிக்கு பெங்களூரு, சென்னை, கோவா மற்றும் புனே அணிகள் தேர்வு பெற்றன.

இதற்கிடையே, ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. புனே மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது. சென்னை மற்றும் கோவா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இந்நிலையில், பெங்களூரு மற்றும் புனே அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது. 

ஆட்டத்தின் 15, 65 மற்றும் 89-வது நிமிடங்களில் பெங்களூரு அணியின் சுனில் சேத்தி கோல் அடித்தார். ஆனால், புனே அணி சார்பில் 82-வது நிமிடத்தில் ஜோனாதன் லூக்கா ஒரு கோல் மட்டுமே அடித்தார். இறுதியில், பெங்களூரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அடுத்த ஆட்டம் சென்னை மற்றும் கோவா அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018