தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 180/5

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. 

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாளில் ஆஸ்திரேலியா 71.3 ஓவர்களில் 243 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

ரபாடா 96 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.அதன்பின், தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 11 ரன்னுடனும், நைட்வாட்ச்மேன் ரபாடா 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாளில் அம்லா 56 ரன்களுடனும், டீன் எல்கர் 57 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். ஆட்டநேர முடிவில், தென்ஆப்பிரிக்கா அணி 95 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது. டி வில்லியர்ஸ் 74 ரன்களுடனும், 

பிலெண்டர் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பிலாண்டர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய  மகாராஜ் அதிரடியாக விளையாடி 24 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன்கள் அடித்து அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டி வில்லியர்ஸ் சதமடித்து அசத்தினார். இது அவரது 22-வது சர்வதேச டெஸ்ட் சதமாகும்.

அடுத்து நிகிடி 5 ரன்னில் ரன்அவுட் ஆக தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 118.4 ஓவரில் 382 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. டி வில்லியர்ஸ் 126 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 139 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், மிச்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஸ்டார்க், லியான் ஆகியோர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

அதன்பின், ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பான்கிராப்டும், வார்னரும் களமிறங்கினர். வார்னர் 13 ரன்களும், பான்கிராப்ட் 24 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அவரை தொடர்ந்து இறங்கிய உஸ்மான் கவாஜா பொறுப்புடன் விளையாடினார். ஆட்டமிழந்தார். ஸ்மித் 11 ரன்னிலும், ஷான் மார்ஷ் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். நிதானமாக ஆடிய கவாஜா 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய மிச்செல் மார்ஷும், டிம் பைனும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதையடுத்து, ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. மிச்செல் மார்ஷ் 39 ரன்களுடனும், டிம் பைன் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகாராஜ், நிகிடி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்காவை விட 41 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018