நாட்டின் அபிவிருத்திகளுக்கு அரசியல் குழப்பங்கள் இடையூறு: சிவசக்தி சாடல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள், அபிவிருத்திகளுக்கு பெரும் இடையூறாக உள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில்  (திங்கட்கிழமை) இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஒரே நாளில் பல பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை நடத்துவதனால் பல்வேறு இன்னல்களை திணைக்கள தலைவர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகளும் எதிர்கொண்டு வருகின்றனர். எனவே இவ்விடயம் தொடர்பாக இணைத்தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி தீர்மானம் ஒன்றினை எடுக்கவேண்டிய தேவையுள்ளது. ஆகவே இது தொடர்பாக நாம் தீர்மானம் எடுப்போம்.

அத்துடன் வவுனியா பிரதேச செயலகமானது அதிகளவான மக்களையும் அதிகளவான நிலப்பிரதேசத்தினையும் கொண்டமைந்துள்ளமையால் இங்கு பல பிரச்சனைகள் உள்ளன. மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டிய குடும்பங்கள் இருக்கின்றன. பிரதேச சபைகளுக்குட்பட்ட பல கிலோமீற்றர் தூரம் கொண்ட வீதிகள் திருத்தம் செய்யப்படவேண்டியுள்ளன. அத்துடன் போக்குவரத்து வசதிகள் உட்பட பல விடயங்களை இந்த பிரதேச செயலகப் பிரிவில் செய்யவேண்டியுள்ளது.

இந்நிலையில் நாட்டின் நிலையான அபிவிருத்தி என்பது அரசின் ஸ்திரத்தன்மையில் இருந்துகொண்டே செய்ய முடியும். ஆனால் இந்த அரசாங்கம் பதவியேற்ற பின்னர் 3 வரவு செலவுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதன்போது எமது பிரதேசத்தினதும் மாகாணத்தினதும் தேவைகளை முன்வைத்தோம். ஆனால் போதுமான நிதி கிடைக்கவில்லை. ஆகவே நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு, மத்தியில் நிலையான ஆட்சி தேவையாகவுள்ளது.

நாடு இன ரீதியாகவும், மத ரீதியாகவும் முரண்பட்டு கொந்தளிப்பாக உள்ளதும்,  உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள ஆட்சி அதிகாரங்களில் இருக்கக்கூடிய முரண்பாடான நிலையும் அபிவிருத்தியை கொண்டு செல்ல சவாலாக உள்ளது” என்றார்.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018