காவிரி பிரச்னையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியாவிட்டால் அதிமுக எம்பிக்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வைக்க வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லையென்றால், அதிமுக எம்பிக்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என துரைமுருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்லி எஜமானர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் செய்யப்போகும் துரோகத்தை மறைக்க இப்போதே முதல்வர் திமுக மீது பழி போட்டு திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. 

கர்நாடக தேர்தலை மனதில் வைத்து தமிழகத்தை காவிரி பிரச்னையில் மத்திய பாஜ அரசு வஞ்சித்து விடப் போகிறது என்று ஸ்டாலின் எச்சரித்தார். அதுபோலவே இப்போது மத்திய பாஜ அரசு காவிரி பிரச்னையில் தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. 

உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கெடுவில் 4 வாரங்கள் முடியப் போகிறது. ஆலோசனை, என்று இழுத்தடித்து வரும் மத்திய பா.ஜ. அரசு அமைச்சரை விட்டும், செயலாளரை விட்டும் குழப்பமான நிலைப்பாடுகளை பேட்டி என்ற பெயரில் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. சில நாட்களுக்கு சீராய்வு செய்யலாம் என்று நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் பேட்டியளித்து அதை மு.க.ஸ்டாலினும் கண்டித்திருந்தார்.

மத்திய அமைச்சர்கள், மத்திய நீர்வளத்துறை செயலாளர் கர்நாடக தேர்தல் லாபத்திற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது மத்திய பாஜ அரசை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி திமுக மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.

 மத்திய பாஜ அரசை திருப்திப்படுத்தவும், தமிழகத்தில் காவிரி பிரச்னையில் உருவாகியுள்ள ஒற்றுமையை சீர்குலைக்கவும் திமுக மீது பழி போடுவதை நிறுத்தி விட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப் பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். 

அப்படி முடியவில்லையென்றால் அண்டை மாநிலமான ஆந்திரா முதல்வர் சந்திரபாபு மாநில உரிமைக்காக போராடி தனது அமைச்சர்களை மத்திய அரசிலிருந்து ராஜினாமா செய்ய வைத்திருப்பது போல் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக எம்.பி.க்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் கட்டளை ஏற்று திமுக எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018