ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு

பதவியை பயன்படுத்தி ஊழல் மூலம் சொத்துக்களை குவித்து தேர்தல் விதிமுறைகளை மீறிய ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் தடுப்பு விஜிெலன்ஸ் இயக்குனருக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மனுவில் ஆர்.எஸ். பாரதி கூறியிருப்பதாவது: தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு துறைகளை வைத்துள்ளார்.

அவர் தனது பதவிக்காலத்தில் பதவியை தவறாக பயன்படுத்தி ஊழல் மூலம் முறைகேடாக சட்ட விரோதமாக சொத்துக்களை தனது பெயரிலும் மனைவி, சகோதரர்கள், உறவினர்கள், பினாமிகள் பெயரில் மிக அதிக அளவில் குவித்தார். பெருமளவு தொகையை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்தார்.

ஆனால் வருமான வரித்துறையினரிடம் சரியான கணக்கு விவரங்களுக்கு பதிலாக தவறான விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல தேர்தல் ஆணையத்திலும் தவறான சொத்து விவரங்களை தந்துள்ளார். 2016ல் தேர்தல் பிரமாண வாக்குமூலத்தில் தனது வருவாய் ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்து 875 என்று கூறியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள இன்னோவா கார் வாங்கியுள்ளார்.

(இதே போல ஓ. பன்னீர் செல்வம் மற்றும் மனைவி, குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்து விவரங்களை விரிவாக குறிப்பிட்டுள்ளார்.) சிபிஐ விசாரணைக்கு உட்பட்டுள்ள சேகர் ரெட்டியுடன் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நேரடி தொடர்பும் உள்ளது. சேகர் ரெட்டியிடம் சிக்கிய டைரி மூலம் ஓ. பன்னீர்செல்வமும் மற்றவர்களும் 4 மாதத்தில் ரூ.4 கோடிக்கு மேல் பெற்றுள்ளனர் என்பது வெளியாகியுள்ளது.

தேர்தல் விதிமுறைகளுக்கு நம்பிக்கை  துரோகம் செய்துள்ளார். இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே இது பற்றிய விசாரணைக்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018