உலகக்கோப்பை தகுதிச்சுற்று - ஐக்கிய அரபு எமிரேட்சை சுருட்டியது அயர்லாந்து

உலகக் கோப்பை தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சுருட்டிய அயர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் இருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும். இதற்கிடையே, முதல் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.

நேற்று நடந்த போட்டிகளில் அயர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை பெய்ததால் ஆட்டம் 44 ஓவராக குறைக்கப்பட்டது.

அயர்லாந்து அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக வில்லியம் போர்டர்பீல்டும் பால் ஸ்டிர்லிங்கும் களமிறங்கினர். இருவரும் பொறுப்பாக விளையாடினர். இதனால் அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அணியின் எண்ணிக்கை 205 ஆக இருக்கும்போது போர்டர்பீல்டு 92 ரன்களில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதமடித்த பால் ஸ்டிர்லிங்க் 117 பந்துகளில் 5 சிக்சர், 15 பவுண்டரியுடன் 126 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆடிய கெவின் ஓ பிரையன் 27 பந்துகளில் அரைசதமடித்து அவுட்டானார். இதனால் அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 44 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் மொகமது நவீத் 3 விக்கெட்டும், இம்ரான் ஹெய்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி களமிறங்கியது. ஆனால், அயர்லாந்து அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சிக்கி 29.3 ஓவரில் 91 ரன்களில் சுருண்டது.

அயர்லாந்து சார்பில் ரான்கின் 4 விக்கெட்டும், சிமி சிங் 3 விக்கெட்டும் மெக்கார்த்தி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, உலக கோப்பை தகுதிச்சுற்றின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின, இதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து அணி 28.4 ஒவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதைத்தொடர்ந்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த சுற்று போட்டிகள் நாளை மறுதினம் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018