குரங்கணியில் காட்டுத்தீ எதிரொலி: கேரளாவில் மலையேற்றத்துக்கு தற்காலிக தடை

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ பரவியது. அப்போது அங்கே மலையேற்றத்தில் ஈடுபட்டு இருந்த சென்னை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேர் இந்த தீயில் சிக்கி உயிரிழந்தனர். சுமார் 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளா முழுவதும் மலையேற்றத்துக்கு தற்காலிக தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறுகையில், மாநில வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வனத்துறையினரை கேட்டுக்கொண்டிருப்பதாகவும், இந்த சூழ்நிலையை ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க தமிழக அதிகாரிகளுக்கு இடுக்கி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆலோசனைகளை வழங்கியதாக கூறியுள்ள பினராயி விஜயன், இந்த மீட்பு பணிகளில் கேரள மாநில போலீஸ், தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையினரும் ஈடுபட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். 


Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018