வித்தியாசமாக அவுட்டாகி வரலாற்றில் இடம்பிடித்த கே எல் ராகுல்

இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த தொடரின் 4வது போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கை நடத்துகின்றது. இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்கேற்று வருகின்றன.

2வது வெற்றி:

இந்த தொடரில் முதல் போட்டியில் இலங்கையுடன் தோற்றாலும், அடுத்த போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

நேற்று இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடிய போட்டியில் இந்தியாவின் சர்துல் தாகூர் 4விக்கெட் எடுத்தும், மணீஸ் பாண்டே 42, தினேஷ் கார்த்திக் 39 ரன் எடுத்ததால் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 3வது வீரராக களமிறங்கிய கே எல் ராகுல் ஹிட்-அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜீவன் மெண்டீஸ் வீசிய பந்தை சற்று பின் சென்று எதிர் கொண்ட ராகுல், ஸ்டெம்பில் காலை பட வைத்தார். இதனால் ஹிட்-அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

டி20 போட்டியில் ஹிட்-அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்த முதல் இந்தியர் என்ற மோசமான வரலாறை படைத்துள்ளார். முன்னதாக லாலா அமர்நாத் மற்றும் நயன் மோங்கியா முறையே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் ஹிட் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்த முதல் இந்தியர்கள் என வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர்.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018