ஈ.பி.ஆர்.எல்.எப். உடன்பாடாமைக்கு காரணம் சொன்னார் செயலாளர் ஆனந்தன் எம்.பி

ஐ.நா.விடயம் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்துடன் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் உடன்படாமைக்கான காரணத்தை  வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணின்  செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் எம்.பி வெளியிட்டார்.

மனித உரிமை பேரவையிலே நடைபெறுகின்ற தீர்மானம் தொடர்பாக கால அவகாசம் வழங்குவதா இல்லையா என்பது பற்றி நீண்ட நேரம் பேசப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த பெரும்பாலான பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்ற கருத்தை தெரிவித்திருந்தனர். 

இதற்கான காரணம் 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 18மாத கால அவகாசத்திற்குள்ளேயே எந்தவித முடிவுகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத காரணத்தினாலேயே அவகாசரம் வழங்ககூடாது என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது

எனினும் கடும் நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது. எங்களது கட்சிக்கு இதில் உடன்பாடில்லை. நாங்கள் ஏற்கனவே ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என  கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை வழங்கியிருக்கின்றோம். நாங்கள் அவ்வாறு வழங்கி விட்டு கடும் நிபந்தனை அடிப்படையில் கால அவகாசத்தை வழங்குவது என்பது முரண்பட்டதாகும். 

இரண்டாவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளருடைய உத்தியோக பூர்வமாக அறிக்கை 22ஆம் திகதி தான் வெளிவர இருக்கின்றது. வெளிவந்த பின்னர் அதில் என்ன விடயங்கள் உள்ளடங்கிள்ளது என்று நாங்கள் கூடி ஆரய வேண்டிய தேவையுள்ளது. 

அந்த அறிக்கை வந்த பின்னர் எமது முடிவை தெரிவிக்கலாம். இதற்கப்பால் எங்களுடை கட்சியின் தலைவர் இக்கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. தலைவர் அழைக்கப்படாமையால் எமது கட்சியின் தலைவரோடும், மத்திய குழுவோடும் கூடி பேச வேன்டியிருக்கின்றது. 

ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களால் சில  நாடுகளுக்கு கால அவகாசம் வழங்கப்படலாம் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு கால அவகாசம் வழங்கலாம் என்ற செய்தி சொல்லப்பட்ட பின் இக் கூட்டம் கூடுவது  வெறுமனே ஒரு கண் துடைப்பாகவே பார்க்கவேண்டியுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிரசுக்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு அப்பால்  வடக்கு கிழக்கின் சிவில் அமைப்புக்கள், தமிழ் மக்கள் பேரவை, மத தலைவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலர் உட்பட இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கக்கூடாது என தெட்டத்தெளிவாக எழுத்து மூலமாக கூறி இருக்கின்றோம். 

பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் மக்கள் பிரதிநிதிளாகிய நாம் முன்னுக்கு பின் முரணாக முரண்பட்ட ரீதியில் நாங்கள் நடக்க முடியாது. 

எமது கட்சி மத்திய குழுவானது ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்க கூடாது என தீர்மானித்துள்ளது. இன்றைய (நேற்று) கூட்டத்தில் எமது கட்சியின் தலைவர் பங்கு கொள்ளவில்லை. ஆகவே ஏனைய கட்சிகள் ஆதரவளித்ததைப் போன்று எமது கட்சி கூடி  ஆராயாது எடுத்த எடுப்பில் ஆதரவை வழங்க முடியாது. 

ஆகவே இந்த விடயம் சம்பந்தமாக எடுக்கப்பட்ட தீர்மானத்தினை பங்காளிக்கட்சி என்ற வகையில் நாம் உடன்படவில்லை என்றார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர். எல்.எவ்.பை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணசிங்கம், ஆர்.இந்திரராஜா, எம்.தியாகராசா, து.ரவிகரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். 

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018