காணாமல் போனோர் அலுவலகம் துரித செயற்பாடுகளை முன்னெடுக்கும் : ஜெப்ரி பெல்ட்மன் நம்பிக்கை

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு பொறுப்பான ஆணையாளர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, விரைவில் காணாமல்போனோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் என நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுடனான ஐக்கிய நாடுகள் சபையின் உறவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

இவ்விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் போன்ற தரப்பினரை சந்தித்து உரையாடியிருந்தார்.

இதன்போது இலங்கையின் சிவில் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரதிநிதிகளின் செயற்பாடுகளை பாராட்டியதோடு, காணாமல் போனோர் அலுவலகத்திற்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையினை தொடர்ந்து காணாமல் போனோர் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நம்புவதாகவும் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்.</p>

மேலும் தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வலுகட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான சமவாய சட்டம் அரசாங்கம் மக்கள் தொடர்பாக கொண்டள்ள பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு இலங்கையில் ஜனநாயக நிலைமைகள் பேணப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதற்கு அமைவாக அரசியலமைப்பு சீர்திருத்தம், நல்லிணக்கம், பயங்கரவாத மற்றும் வன்முறை செயல்களை கட்டுப்படுத்தல் ஆகிய விடயங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

2015 இல் ஆட்சிக்கு வந்தபோது அரசாங்கத்தின் குறிக்கோள்களான சமாதானத்தை நிலைநாட்டுதல், பாதுகாப்பு மற்றும் நாட்டின் செழிப்புத்தன்மை என்பவற்றை வலுப்படுத்தல் போன்றவற்றை நோக்கிய இலங்கை அரசியல் தலைவர்களின் நகர்வுகள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அதனை குறிப்பிட்ட கால எல்லைக்குள் துரிதமாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Ninaivil

அமரர் தபோதினி கௌறிராம்
அமரர் தபோதினி கௌறிராம்
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
28 ஓகஸ்ட் 2018
Pub.Date: September 26, 2018
திரு வல்லிபுரம் பாலகுமார்
திரு வல்லிபுரம் பாலகுமார்
யாழ். கரவெட்டி
கனடா
24 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 26, 2018
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018