ஜப்பானில் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் ஞானசார தேரர் பிரசன்னமாகியிருந்தாரா?

ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரசன்னமாகியிருப்பதாகக் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளனஇந்த நிகழ்வில் அமைச்சர்களான திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

ஜப்பானிலுள்ள இம்பீரியல் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

தனது ஜப்பானிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கான தூதுக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவராக ஞானசார தேரரை ஜனாதிபதி அழைத்துச் சென்றாரா அன்றேல் ஜப்பானிற்கு சென்றிருந்த ஞானசார தேரர் ஜனாதிபதி வருகையை அறிந்து அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டாரா என்ற கேள்விகளை சமூகவலைத்தள பயனாளர்கள் எழுப்பியுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறைகளுக்கு தூபமிடும் வகையில் பிரசாரங்களை மேற்கொள்வதாக கடும் சர்ச்சைக்குரியவராக நோக்கப்படுபவர் ஞானசார தேரர்.

அளுத்கமவில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு பிரதானமான காரணம் என கடும் கண்டனங்களுக்கு ஆளான போதும் இவருக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018