மோடியின் ஏமாற்று வேலையை தோலுரிப்போம்: சோனியா ஆவேசம்

வரும் தேர்தலில் மோடியின் ஏமாற்று தந்திரத்தை தோலுரித்து காட்டுவோம் என டில்லியில் நடந்த காங்., கூட்டத்தில் பங்கேற்று சோனியா ஆவேசமாக பேசினார்.

டில்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு கூட்டத்தில், சோனியா பேசியதாவது: 

சவாலான நேரத்தில் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற ராகுலுக்கு வாழ்த்துகள். காங்கிரசின் வெற்றி இந்தியாவின் வெற்றி. ஒவ்வொருவரின் வெற்றி. காங்கிரஸ் என்பது அரசியல் கட்சியல்ல. இது ஓர் இயக்கம். தற்போது கட்சியை பலப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். கர்நாடகாவின் சிக்மகளூருவில் இந்திராவின் வெற்றி, அரசியல் சூழலை மாற்றியது. அதேபோன்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 

2019 ல் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். 2019 ல் நாட்டை காங்கிரஸ் மீட்டெடுக்கும். இதற்காக இப்போதே திட்டமிட வேண்டும். அதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். அரசியலில் நுழைய நான் விரும்பியதில்லை. ஆனால் சூழ்நிலை என்னை அரசியலுக்கு கொண்டு வந்தது. இது உங்களுக்கு தெரியும். இரண்டு சகாப்தமாக காங்கிரஸ் தலைவராக இருந்தது பெரும் பாக்கியம். தொண்டராக இருப்பதில் எனக்கு பெருமை. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்களை மோடி அரசு வலுவிழக்க செய்துவிட்டது. ஐ.மு.,கூட்டணி திட்டங்களை மோடி மதிக்கவில்லை. பிரதமர் மோடி அரசு எதிர்கட்சியினரை அழித்து வருகிறது. மீடியாக்களை நசுக்க நினைக்கிறது. மோடி வாக்குறுதிகள் மட்டும் கொடுப்பவராகவே உள்ளார். மோடியின் ஏமாற்று வேலையை தோலுரிப்போம். இவ்வாறு சோனியா பேசினார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018