இன்றைய ராசிபலன் 19.3.2018

மேஷம்


மேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். இரவு 8.23 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள். 


ரிஷபம்


ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.  


மிதுனம்


மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.   


கடகம்


கடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.  


சிம்மம்


சிம்மம்: இரவு 8.23 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவிக் கேட்டு உறவினர், நண்பர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். நிதானம் தேவைப்படும் நாள்.


கன்னி


கன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.  விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். இரவு 8.23 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


துலாம்


துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 


விருச்சிகம்


விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரசெலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டு. கனவு நனவாகும் நாள். 


தனுசு


தனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும், எதிர்பாராத ஒரு வேலைமுடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள்.  உழைப்பால் உயரும் நாள். 


மகரம்


மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


கும்பம்


கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். புதிய பாதை தெரியும் நாள். 


மீனம்


மீனம்: இரவு 8.23 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உங்கள் மீது சிலர் பழி சுமத்துவார்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். கடினமாக உழைக்க வேண்டிய நாள். 

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018