அரசாங்கம் எம்மை நீண்ட காலத்திற்கு ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது; மாவை

வவுனியா நகர கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா மன்னார் முல்லைத்தீவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்

மத்திய அரசாங்கத்திற்கு சில அதிகாரங்களும் மாநில அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரங்களும் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் அதிகாரம் பகிரப்படும் என இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவே உண்மையும். ஆனால் அது கேள்விக்குறியாகியுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருக்கின்றோம். தென்னிலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் உள்ளுராட்சி மன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் காரணமாகவே இது ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும் உங்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற எமக்கு முன்னரையும் விட அதிகமான பொறுப்பு உள்ளது.போர் கூட நடத்தலாம். உயிரையும் பணயம் வைக்கலாம். உயிரைக்கூட துறந்திருக்கின்றோம். ஆனால் சமாதானத்தை நடத்துவது போரை நடத்துவதையும் விட பாரிய பொறுப்பு வாய்ந்தது.

ஆகவே உள்ளுராட்சி மன்றங்களிலும் எதிரில் நிற்பவர்களுடன் போராடிக்கொண்டிருக்காமல் இணக்கத்துடன் சபைகளை நடத்தவேண்டிய பாரிய சவால் எமக்கு உள்ளது.

கடந்தமுறை 90 வீதமான சபைகளில் எமது கட்சியினர் எமது பங்காளிக்கட்சியினர் தலைவராக உப தலைவராக இருந்து செயற்பட்டார்கள். அங்கு பல சீர்கேடுகள் பல சீர் குழைவுகள் ஊழல் ஊதாரித்தனம் ஒருவரை ஒருவர் வீழ்த்துவதற்கு எடுத்த முயற்சிகள் வரவு செலவுத்திட்டத்தினை நிறைவேற்ற முடியாத நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது அதை விட பாரிய ஆபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வரவு செலவுத்திட்டத்தினை நாம் கொண்டுவராது விட்டால் அந்த வரவு செலவுத்திட்டம் நிறைவேறாது விட்டால் நாம் பேசிக்கொண்டிருக்கின்ற அபிவிருத்தியை அல்லது நிர்வாகத்தினை செய்யமுடியாது போய்விடும். அந்த சந்தர்ப்பத்தை பார்த்தே எம்மை வீழ்த்துவதற்கு பார்ப்பார்கள். அதற்கு நாம் பலியாகிவிடாமல் மிக கவனமாக அதற்கான தந்திரோபாயங்களை ஏற்படுத்தி இந்த சபைகளை நாம் கொண்டு செல்ல வேண்டும்.

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் 16 திட்டங்கள் நேரடியாக வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் தேர்தல் அறிக்கையில் கூட மக்களுக்கு விளங்கப்படுத்தியிருந்தார்கள்.

வடக்கில் ஒரு மாகாணசபை நீதியரசரை ஒரு முதலமைச்சராக கொண்டும் மருத்துவர்கள் பொறியிலாளர்கள் சட்டத்தரணிகள் கல்வி கற்றவர்கள் பட்டதாரிகளாக இருப்பவர்களுடன் சுமார் 50 வீதமானவர்கள் இளம் உறுப்பினர்களை கொண்டு அமைந்துள்ளது.

ஒரு உதாரணமான அமைப்பாகவும் எங்கள் இனத்தின் விடுதலைக்கான அமைப்பாகவும் அழிந்துபோன எங்கள் தேசத்தை மீள கட்டியெழுப்புவதற்கும் மிக அதிகமான உரித்தை கொண்டிருந்த சபையை நம்பிய மக்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை கண்டுள்ளார்கள். எங்களுடைய வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். அத்துடன் ஏனைய விடங்களை நாம் ஆராயத்தொடங்கியுள்ளோம்.

நாம் எமது விடுதலையை நோக்கி செல்வதற்காக அந்த இலக்கை அடைவதற்காக எங்கள் இனத்தை ஒன்றுபடுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியம். இம் முறை நாம் அதில் இழப்பை சந்தித்திருக்கின்றோம்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பையும் சம்பந்தன், சுமந்திரன் உட்பட எங்கள் கட்சி சார்ந்தவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் அரசியல் நாகரீகத்திலே இருந்ததே தவிர தமது இலக்கு என்ன என்பது தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. அதற்கு பத்திரிகைகளும் உதவியாக இருந்திருக்கின்றன.

இன்று நாங்களும் மக்களும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் எமது பிரச்சனைக்கு புதிய அரசியல் அமைப்பினால் எங்கள் மண்ணில் விடுதலை ஏற்பட வேண்டும் என நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தோம். அதை நாம் இன்றும் அடையவில்லை. அரசாங்கத்தினை நாம் பல தடவைகள் வற்புறுத்தினோம்.

இன்று எமக்கிருக்கின்ற ஒரே பலம் உலக நாடுகளினுடைய ஒன்றுபட்ட ஏகமனதாக இலங்கை மீது 2015 இல் எடுக்கப்பட்ட தீர்மானம். அத்துடன் எமக்குள்ள வாக்குப்பலம்.  ஆகவே அரசாங்கம் எம்மை நீண்ட காலத்திற்கு ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது.

நாம் விரைவில் ஒரு தீர்மானம் எடுக்கவேண்டி வரும். தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்ற நிலைப்பாடுகளால் நாம் அதற்கு ஆயத்தம் செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.


 

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018