தென்னாபிரிக்க பாணியிலான ஆணைக்குழுவை அமைக்குமாறு இலங்கையிடம் வலியுறுத்து

யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்கள் குறித்து ஆராய தமது கடப்பாடுகளுக்கு மதிப்பளித்து தென்னாபிக்காவின் பாணியிலான ஆணைக்குழுவை இலங்கை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஆணைக்குழுவை அமைக்க உள்ளதாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தமது நோக்கத்தை முன்வைத்திருந்தது.

இலங்கையின் செயற்பாடுகளில் ஓரளவு முன்னேற்றம் காணப்படுகின்ற போதும், எதிர்ப்பார்த்ததை விட அது மெதுவானதாகவே உள்ளது என ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான பிரிட்டன் அமைச்சர் மார்க் ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான சட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு, அந்த ஏற்பாடுகள் நீதித்துறை பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போருக்குப் பின்னரான தமது முழுமையான கடப்பாடுகளை அரசாங்கம் நிறைவேற்றுவதை தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நெருங்கிய நண்பன் என்ற வகையில், இலங்கை அரசாங்கத்தின் விரைவான முன்னேற்றங்களுக்கு தாம் ஒத்துழைப்பையும், ஊக்குவிப்பையும் வழங்குவதாகவும் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான பிரிட்டன் அமைச்சர் மார்க் ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018